சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த உள்ளார்.

1991-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது பிரசார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இந்த ஆண்டு அஞ்சலி செலுத்துகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதற்காக வரும் 21-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார் ராகுல்.