சென்னை

பி எல் போட்டி பிளே ஆஃப் சுற்றில் சென்னையில் நடைபெறும்  போட்டிக்கான அனைத்து டிக்கட்டுகளும் அரை மணியில் விற்றுத் தீர்ந்தன/

ஐ பி எல் போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன   இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 7  லீக் போட்டிகள் நடந்தன.  இதற்கான டிக்கட்டுகள் ஆன்லைன் மற்றும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டன.    வரும் 23 ஆம் தேதி அன்று முதல்  பிளே ஆஃப் போட்டி மற்றும் 24 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது/

இந்த இரு போட்டிகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கட்டுகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த டிக்கட்டுகள் விற்பனை இன்று பகல்  12 மணிக்குத் தொடங்கியது/  இந்த விற்பனை தொடங்கி அரை மணி நேரத்தில் அனைத்டு டிக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன

போட்டிகளுக்கான டிக்கட் விலை ரூ, 2000, 2500, 3000 மற்றும் ரூ.5000 ஆகும். இதில் விளம்பரதாரர் டிக்கட்டுகள் நீங்கலாக மற்ற டிக்கட்டுகள் ஒரு போட்டிக்கு குறைந்தது 25,000  டிக்கட்டுகள் விற்பனை ஆகி உள்ளன.