அஜித் நடிப்பில் 1999 ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

இரட்டையர்களில் தம்பி அஜித்தின் மனைவியான சிம்ரனை அடைய அண்ணன் அஜித் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் இந்தப் படத்தின் கதை.

எஸ்.ஜே. சூர்யா எழுதி இயக்கிய முதல் படம் ‘வாலி’ இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போனி கபூர் இதன் உரிமையை வாங்கியிருந்தார்.

ரீமேக் உரிமையை விற்க தயாரிப்பாளர் மட்டும் முடிவெடுத்தால் போதாது அந்தப் படத்தின் கதாசிரியர் மற்றும் இயக்குனருக்கும் உரிமை உள்ளது என்று எஸ்.ஜே. சூர்யா வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் எஸ்.ஜே. சூர்யா இந்த நிலையில் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘தல 61’ என்று மூன்று படங்களுக்கு அஜித்தை ஒப்பந்தம் செய்துள்ள போனி கபூர், அடுத்ததாக அஜித்தை வைத்து வாலி படத்தின் இந்தி ரீமேக் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.