நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸிங், ஏரோ மாடலிங், சமையல் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துச் சிறந்தவராக விளங்குகிறார். அந்த வகையில் கடந்த மாதம் கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று அடுத்த சுற்றுக்குத் தேர்வாகினர்.

பின்பு டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார்.

அஜித் பங்கேற்ற தேசிய பயிற்சிப் போட்டியின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்தப் போட்டிகளில் மொத்தம் மூன்று பிரிவில் அவர் பங்கு பெற்றுள்ளார். அதில், ப்ரீ பிஸ்டல் பிரிவில் எட்டாவது இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் ஒன்பதாவது இடத்தையும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 12வது இடத்தையும் பிடித்துள்ளார்.