நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில், தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்வையிட்டுளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின்,

Asuran – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தனது வாழ்த்துகளையும் – பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் ட்வீட் செய்து உள்ளார். அதில், ‘காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.