வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான படம் ‘அசுரன்’. வெளியான அன்றே திரைப்படத்தைத் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது .

அசுரன் தமிழகத்தில் முதல் நாள் ரூ 6.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இந்தப் படம் 10 நாட்களில் மொத்த வசூலில் ரூ.50 கோடியைக் கடந்துள்ளது. மேலும், திரையரங்க வியாபாரம், இசை உரிமை, தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு உரிமம் என ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ள அசுரன் படத்தை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.