உயரமான பாறை விளிம்பில் அஜித்….!

Must read

உயரமான பாறை விளிம்பில் நின்று அஜித் எடுத்திருக்கும் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் இந்தியக் கொடியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வைரலானது. மேலும் அங்குள்ள அஜித் ரசிகர்கள் என இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது .

அதனைத் தொடர்ந்து வட இந்தியாவின் வறண்ட பாலைவனப் பகுதிகளில் அஜித் தனது நண்பர்களுடன் பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

கடும் வெயிலில் பைக் நிழலில் அவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் இரு தினங்கள் முன்பு வெளியானது.

இந்நிலையில் உயரமான பாறை விளிம்பில் நின்று அஜித் எடுத்திருக்கும் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

 

More articles

Latest article