சன் டிவி சீரியலில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா….!

Must read

வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்துகொண்டிருந்த நடிகை தற்போது சன் டிவி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

இது வரைக்கும் இல்லாத வகையில் கே ஆர் விஜயா முதல்முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.

ஒருகாலத்தில் சினிமாவில் பட்டிதொட்டியெல்லாம் கலக்கி நடிகர்களுக்கு இணையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது சீரியலில் அறிமுகமாக இருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அன்பே வா என்னும் சீரியலில் கதாநாயகனுக்கு தற்போது ஆக்சிடென்ட் நடந்து இருப்பது போலவும், அதனால் கதாநாயகி கோவிலில் சென்று சாமியிடம் முறையிட்டு வேதனையோடு கையெடுத்து கும்பிடும் போது சாமியாக கேஆர்விஜயா என்ட்ரி கொடுக்கிறார். இதை பார்த்ததும் அப்படியே பழைய படத்தை பார்ப்பது போல இருக்கிறது என்றும் இதுவரை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More articles

Latest article