பைக் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவத்துடன் கூடிய சுற்றுலாவை வழங்க AK Moto Ride என்ற நிறுவனத்தை அஜித்குமார் துவங்கியுள்ளார்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு பாதுகாப்பான சுற்றுப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் ரைடர்களுக்கு தடையற்ற வழிகாட்டுதலை வழங்குவார்கள்.

தவிர, நன்கு பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளையும் ஏகே மோட்டோ ரைடு வழங்கும் என்று அஜித்குமார் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அஜித் குமாரின் இந்த அறிவிப்பு பைக் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.