லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் ரிலாக்ஸாக நடிகர் அஜித்… சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு….

Must read

சிம்ப்ளிசிட்டிக்கு உதாரணமாக திகழ்பவர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அஜித் குமார் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட நடிகர், எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அடுத்ததாக AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார், அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து எந்தவித விளம்பரமும் இன்றி சமீபத்தில் லண்டன் சென்றார்.

அங்குள்ள பைக்கர் குழுவுடன் பல்வேறு ஊர்களுக்கு பைக்கிலேயே சென்று வந்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் கடந்த வாரம் லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்க சென்ற அஜித்தை கவுண்டரில் இருந்த நபர் அடையாளம் கண்டுகொண்டதோடு அவருடன் கைகுலுக்கி பேசினார்.

எந்தவித பந்தாவும் இன்றி அஜித் மிகவும் சிம்பிளாக நடந்து கொண்டது அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்த சி.சி.டி.வி. காமெராவில் பதிவானது, இந்த காட்சிகள் விடியோவாக வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் குறித்த தகவல்களை தினமும் எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த புதிய வீடியோ மேலும் குஷிபடுத்தியுள்ளது.

More articles

Latest article