சென்னை; என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள அதிமுகவில், சசிகலாவும் தன்பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.

அதிமுகவின் இன்றைய பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதுடன், அவர் பொருளாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.  தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  சசிகலா, இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அதிமுக தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது என்று கூறினார். மேலும்,  அதிமுகவில் தலைமைப் பதவியை பிடிக்க நினைத்தால்  அது நடக்காது என்று கூறியதுடன்; அது சட்டப்படியும் செல்லாது.

திமுகவில் ஏற்பட்ட தவறான சூழ்நிலையால் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார். இதே நிலை அவர் தொடங்கிய கட்சியில் யாருக்கும் வரக்கூடாது. பொதுச் செயலாளரை அடித்தட்டுத் தொழிலாளர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார், இப்போது அப்படிச் செயல்படவில்லை  என கூறியவர், இன்று நடைபெற்ற அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், தனிப்பட்ட நலனுக்காக செய்யக்கூடிய கூட்டமாகவே கருதுகிறேன். உயர்நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பதால் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் கண்டிப்பாக செல்லாது என்றும் கூறினார்.

என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள் என்றதுடன்,  நிழலுக்கு சண்டையிட்டு, நிஜத்தை இழந்து விடக்கூடாது என்றவர், ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம் என்றும் தெரிவித்தார்.