இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும்! துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Must read

மதுரை:

டைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று தமிழக துணைமுதல்வரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளரு மான  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மருது சகோதரர்களின் 218வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்று வெற்றி பெறும் என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தவர், வரும்  டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தபடும் என்றும் கூறினார்.

More articles

Latest article