சென்னை: வரும் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை அதிமுக  செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு  அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வ நடைபெற உள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 26.12.2023 செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.