சென்னை: அரபிக்கடலில் உருவாகும் புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை என தமிழ்நாடு  வெதர்மேன்  தெரிவித்து உள்ளார்.  ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மக்களுக்கு வெதர்மேன் தகவல் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல்  கடந்த 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தபோது, பெய்த கனமழை மற்றும் சூறாவளியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டு சென்றது.

இந்த நிலையில் தற்போது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்த சூழலில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்  அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யலாம், ஆனால் இதனால் சென்னைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

சென்னை வானிலையில் இருந்து விலக வேண்டிய நேரம். அடுத்த 2 நாட்களில் சிட்டியில் (KTCC) தனிமைப்படுத்தப்பட்ட குறுகிய மழை பெய்யும். ஆனால் அதே அப்டேட்ஸ் எதுவும் வெளியிடப்படாது. ஒவ்வொரு முறையும் மழை அப்டேட் போட்டாலும், இயல்பான மழைக்கு உளவியல் ரீதியாக பீதியை ஏற்படுத்தும். ஒன்று. அடுத்த 2 வாரத்தில் சென்னையை தாக்க ஒரு புயலும் வர மாட்டேங்குது நகரத்திற்கான அடுத்த குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் 20-24க்குள் இருக்கலாம், அவற்றை உறுதிப்படுத்த இன்னும் அதிக நேரம் இருக்கிறது. இப்போதைக்கு நிவாரணப் பணிதான் முக்கியம், மழையோ புயல் வதந்தியோ அல்ல.
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை பெய்யும் லோபார்
——————
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு மழை வர அரபிக்கடலில் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி (LoPAR) இதேபோல் திருச்சி பெரம்பலூர் கரூர் டெல்டா பெல்ட் போன்ற மற்ற உட்புறங்களிலும் மழை வரும். எளிய வகையில் வடக்கு உட்புறங்களை தவிர எல்லா மாவட்டங்களிலும் குறுகிய மழை பெய்யும்.
கேரளா எல்லை உள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழை
————-
கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல், குன்னூர், ஈரோடு, கோவை & திருப்பூர், நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து ஈரப்பதம் தள்ளியதால் கேரளாவிலும் நல்ல மழை பெய்யும்.
இந்த வருடம் எம்.ஜே.ஓ நமது அடிப்படைக்கு திரும்ப வருவதால், வடகிழக்கு பருவமழை ஜனவரியில் நீடிக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.