23 நாள் சிறைவாசம் முடிந்தது….கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் விடுதலை

Must read

டில்லி:

23 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

 

ஐஎன்எக்ஸ் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து டில்லி திகார் சிறையில் அடைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி டில்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்ரல் 16ம் தேதி வரை தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அவருக்கு முன் ஜாமீனும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து டில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி ஒரு நாள் கழித்து இன்று திகார் சிறையில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். 23 நாள் சிறைவாசத்து பின்னர் அவர் சிறையில் இருந்து இன்று இரவு வெளியே வந்தார். அப்போது, ‘‘வணக்கம்… நான் திரும்பி வந்துட்டேன்’’ என்று கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article