பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த  ‘வர்மா’ படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது  ‘ஆதித்ய வர்மா’ ஆக பெயர் மாற்றி  மீண்டும் படம் எடுக்க்பபடும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த படத்தை  சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா என்பவர் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. படம் தொடர்பாக தயாரிப்பாளர் இயக்குநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு  ஏற்பட்டதால் வர்மா படம் திடீரென கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து படத்தை வேறு இயக்குனரை வைத்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும்  இயக்க முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக புதிய கதாநாயகியாக பனிதா சந்து என்பவரை ஒப்பந்தம்  செய்தது. அதுபோல இந்த படத்துக்கு ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார்.

மேலும் வர்மா படத்தில் நடித்த ரைஸா வில்சனுக்குப் பதிலாக ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.  மேலும் வர்மா படத்துக்கு இசையமைத்த ரதன் இப்படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். படத்தை   கிரீசாயா என்ற புதுமுக இயக்குனர் இயக்குவதாகவும்,  ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட் அறிவித்து உள்ளது.

இதையடுத்து விரைவில் ஆதித்ய வர்மா-வின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.