மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி திருமணம் சென்னையில் நேற்று எளிமையாக நடந்தது.

விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கும், பரத் என்பவருக்கும் விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் வீட்டில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்த நடிகர் விவேக்கிற்கு தேஜஸ்வினி, அமிர்தா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

“க்ரீன் கலாம்” என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பதைக் கனவாக வைத்து அதனை செயல்படுத்தி வந்தார் நடிகர் விவேக்.

தனது மகள் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்று, மூலிகை பூச்செடிகள் பரிசாக வழங்க வேண்டும் என்று விவேக்கின் கனவாக இருந்த நிலையில் அந்த கனவை அவரது மகள் நிறைவேற்றினார்.

திருமணத்திற்குப் வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் மணமக்கள் சார்பாக மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.