டைரக்டர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘விஷால் 34’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படப்பிடுப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இதனையடுத்து இன்று பூஜை போடப்பட்ட ‘விஷால் 34’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி-யுடன் மூன்றாவது முறையாக விஷால் கைகோர்த்திருக்கிறார்.

அந்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்த யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைப்பாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.