ஆந்திராவில் மகள்களைக் கொண்டு நிலம் உழுத விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி

Must read

சித்தூர்

கள்களைக் கொண்டு நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு 2 காளைமாடுகளை அளித்து உதவ  நடிகர் சோனு சூட் முன் வந்துள்ளார்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மதன்பள்ளி ஆகும்.

இங்குள்ள விவசாயி நாகேஸ்வர ராவ் ஊரடங்கால் மிகவும் துயருற்று வந்தார்.

மாடுகளை உழவுக்கு பய்னபடுப்பத்த பணம் கொடுக்க முடியாத நிலையில் இவர இருந்தார்

இதனால் அவர் தனது 2 மகள்களைக் கொண்டு நிலத்தை உழுதார்.

இது வீடியோ படமாக்கப்பட்டு வைரலாகியது.

இதைக் கண்ட நடிகர் சோனு சூட மனம் நெகிழ்ந்தார்.

தனது டிவிட்டரில் அவர் விவசாயிக்கு நாளைக்குள் இரு காளை மாடுகள் அளிப்பதாக உறுதி செய்துள்ளார்.

மேலும் அந்த இரு சிறுமிகளையும் படிப்பில் கவனம் செலுத்த விடும்படி விவசாயிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

Latest article