சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் போதைக்கு எதிராக ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார்.

தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசே டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, இளைய சமுதாயத்தினரிடையே கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி போன்றவையும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருவருதாக கூறி வந்தாலும், அவை ஏட்டளவிலேயே உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 70% போதைப் பழக்கங்கள் அதிகரித்துள்ளது சமூகத்தை சீரழிக்கின்ற கஞ்சா அபின் ஹெராயின் போன்ற கொடிய போதைக்கு இந்தியாவில் 10 கோடி பேர் அடிமையாகி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் உழைப்பை நம்பி அன்றாட பிழைப்பு நடத்தும் சாதாரண ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளனர். இந்த போதை பழக்கத்தினால் கொலை கொள்ளை கற்பழிப்பு என பெரும் குற்றங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், போதைக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டைபி – DYFI) ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தை தொடங்கி கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.

போதை இல்லாத சமூகம் அமைப்போம் இளைஞர்களை மீட்போம் என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்கள் பெண்கள் என ஏராளமான கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்து போட்டு வருகின்றனர்.

 இந்த கையெழுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார்.