சுகாதார இயக்குனர் குழந்தைசாமி

சென்னை,

மிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொசு உற்பத்திக்கு ஏதுவாக இடம் வைத்திருப்பவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தின் உரிமையாளர்கள் அவர்கள் சுற்றுயிருக்கும் பகுதியை சுத்தமாக வைத்திருக்க 48 மணி நேரம் கெடு விதித்து தமிழக சுகாதாரத்துறை எச்சரிக் விடுத்திருந்தது.

இந்நிலையில், அரசு விதித்த கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்ததார், கொசு உற்பத்தியாக ஏதுவாக சுற்றுப்புறத்தை வைத்திருப்பவர்கள் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே டெங்கு விழிப்புணர்வு, துப்புரவு பணியின் போது ஒத்துழைக்காத 3 பேர் மீது இருபிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஒவ்வொரு பகுதியாக சுகாதாரத்துறை அலுவலர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது, எந்த இடம் சுகாதாரமில்லாமல் கொசு வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதோ அந்த இடத்தின் உரிமையாளர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.