நிலவை ஆய்வு செய்ய உதவும் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை (ஜூலை 14) பிற்பகல் 2:35 மணிக்கு மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட உள்ளது.

இந்த நிலையில் திருப்பதி வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தின் சிறிய மாதிரியுடன் தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியா மூன் மிஷன்: சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்படும்