சென்னை: “என்னை சிறையிலேயே கொல்ல சதி” நடைபெறுகிறது என வலிப்பு நோய் காரணமாக சென்னையின் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் ‘யார் அந்த சார்’ புகழ் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கூறி வருகிறார் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக முன்னாள் நிர்வாகியும், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நம்பிக்கைக்கு உரியவருமான பிரியாணி கடை உரிமையாளரான கோட்டூர்புரம் ஞானசேகரன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ஒரு இளம் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில், குற்றவாளி ஞானசேகரன், சார், சார் என ஒருவரிடம் பேசியதாகவும், அதன்மூலம் அந்த இளம் மாணவியை மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
இது பெரும் பிரளயத்தை உருவாக்கிய நிலையில், ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, வழக்கும் விரைந்து விசாரிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நல்ல திடகாத்திரமாக இருந்து வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, யார் அந்த சார் என்பது கண்டுபிடிக்கப்படும் என கொளுத்தி போட்டார். இதனால், ஞானசேகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்கிடையில், அவரது உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதும், அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வலிப்பு நோய் காரணமாக, அவரை காவல்துறையினர், புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இநத நிலையில், புழல் சிறையில், “சிறை அதிகாரிகள் தன்னை கடுமையாக தாக்குவதாகவும் , சிறையிலேயே தன்னை கொல்ல சதி நடப்பதாகவும் தெரிவித்து, சிறையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.” இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஞானசேகரனால் சிலருக்கு பிரச்சினை உருவாகலாம் என்ற நோக்கில், அவர் கொடுமைப்படுத்தப் படுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
#யார்_அந்த_SIR ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
‘யார் அந்த சார்’ ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு – அரசு மருத்துவமனையில் அனுமதி
[youtube-feed feed=1]யார் அந்த சார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்….