மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான  மே 1ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ள நிலையில், வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மதுரை வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைச் சிறப்பிக்கும்.

2026-ஆம் ஆண்டிற்கான உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 5 வரை நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்வு மே 1-ம் தேதியும் (சித்ரா பௌர்ணமி) நடைபெற உள்ளது.

மதுரை சித்திரை திருவிழா 2026 முக்கிய நிகழ்வுகள்:

  • கொடியேற்றம்:ஏப்ரல் 19, 2026 (ஞாயிறு)
  • பட்டி மண்டபம்:ஏப்ரல் 23, 2026
  • மீனாட்சி பட்டாபிஷேகம்:ஏப்ரல் 26, 2026 (ஞாயிறு)
  • திக் விஜயம்:ஏப்ரல் 27, 2026 (திங்கள்)
  • மீனாட்சி திருக்கல்யாணம்:ஏப்ரல் 28, 2026 (செவ்வாய்)
  • தேரோட்டம்:ஏப்ரல் 29, 2026 (புதன்)
  • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்:மே 1, 2026 (வெள்ளி – சித்ரா பௌர்ணமி)
  • கள்ளழகர் எதிர்சேவை:ஏப்ரல் 30, 2026
  • கள்ளழகர் பூப்பல்லக்கு:மே 2, 2026
  • திருவிழா நிறைவு:மே 5, 2026

குறிப்பு: ஏப்ரல் 27 முதல் கள்ளழகர் திருவிழா மண்டகப்படிகளுடன் கோலாகலமாகத் தொடங்கும்.

 

[youtube-feed feed=1]