சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக திருப்பூரில் 62.97% வாக்குகளும் குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 50.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய சட்டமன்றம் அமைவதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்குத் தொடங்கி, மாலை 6:00 மணி வரை ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. . இந்த தேர்தலில், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தேர்தல் 2026 நேரலை: பல மாதங்களாக நடை பெற்ற தீவிர தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பிறகு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அனைவராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு தேர்தல் களமாகவும் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், காலை 9மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் 11மணி நிலவரப்படி, 37,56 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், பகல் 1மணி நிலவரம்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் விறுவிறுப்பாக பதிவாகி வருவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகபட்சமாக திருப்பூரில் 62.97% வாக்குகளும் குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 50.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 57.55% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பெரம்பலூர் தனி தொகுதியில் 58.67% வாக்குகளும் குன்னம் தொகுதியில் 56.35%வாக்குகளும் பதிவாகியுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் பகல் ஒரு மணி நிலவரப்படி 50.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன . நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 55.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக பாளையங்கோட்டையில் 45.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருநெல்வேலியில் நாங்குநேரியில் 50.17 சதவீத வாக்குகளும் ராதாபுரத்தில் 49.68 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
[youtube-feed feed=1]இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…