சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு பதிவுகள் அதிகரித்து இருப்பது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளன

கடந்த 2021 தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே 76.6 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில், இப்போது பிற்பகல் 3 மணிக்கே 70 சதவீத வாக்குப் பதிவு வந்துள்ளது. இந்த நிலையில் வாக்குப் பதிவு 90 சதவீதத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக பட்சமாக  நாமக்கல் மாவட்டம் 76.43% வாக்குப்பதிவுடன் முதலிடத்தில் உள்ளது.  தர்மபுரி மாவட்டத்தில் 74.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன திருநெல்வேலி மாவட்டத்தில் 62.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கரூர் மாவட்டம் 76.08 சதவீதத்துடனும், சேலம் மாவட்டம் 75.79 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 75.61% மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 75.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இந்த ஐந்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்று வருவது இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

 மாவட்ட வாரியான வாக்குப் பதிவு இதோ!

  • அரியலூர் – 68.97 %
  • செங்கல்பட்டு – 69.46 %
  • சென்னை – 68.13 %
  • கோவை – 71.16 %
  • கடலூர் – 68.53 %
  • தர்மபுரி – 74.68 %
  • திண்டுக்கல் – 74.31 %
  • ஈரோடு – 75.61 %
  • கள்ளக்குறிச்சி – 71.11%
  • காஞ்சிபுரம் – 72.51 %
  • கன்னியாகுமரி – 61.91%
  • கரூர் – 76.08 %
  • கிருஷ்ணகிரி – 70.07 %
  • மதுரை – 67.15 %
  • மயிலாடுதுறை – 65.80 %
  • நாகப்பட்டினம் – 69.98 %
  • நாமக்கல் – 76.43 %
  • பெரம்பலூர் – 70.54 %
  • புதுக்கோட்டை – 69.85 %
  • ராமநாதபுரம் – 63.14 %
  • ராணிப்பேட்டை – 72.46%
  • சேலம் – 75.79 %
  • சிவகங்கை – 64.74 %
  • தென்காசி – 67.14 %
  • தஞ்சாவூர் – 66.65 %
  • நீலகிரி – 63.67 %
  • தேனி – 67.68 %
  • திருவள்ளூர் – 68.07 %
  • திருவாரூர் – 68.43 %
  • தூத்துக்குடி – 65.18 %
  • திருச்சி – 71.05 %
  • திருநெல்வேலி -62.84 %
  • திருப்பத்தூர் – 71.46%
  • திருப்பூர் – 75.38 %
  • திருவண்ணாமலை – 72.19 %
  • வேலூர் – 71.23 %
  • விழுப்புரம் – 71.65 %
  • விருதுநகர் – 70.24 %
[youtube-feed feed=1]