சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய நடிகர் சிவக்குமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும். தவெகவும் முயற்சித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழழில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த சூழலில் சினிமா, அரசியல் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை வைத்தவர், குடிமக்களை குடிகார மக்களாக ஆக்கியது போதும் என்று கூறினார்.
மேலும், அரசியல்வாதிகள், கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல் கடைக்கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். நான் வைக்கும் இந்த கருத்தை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்… ஆனால், ஆட்சியாளர்கள் இதை செய்வார்களா என்று தெரியாது. ஆனால், செய்தால் சந்தோஷம். தமிழ்நாட்டில் குடியில் சுமார் கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” .
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…
[youtube-feed feed=1]