கரூர்: கரூர் மாவட்டத்தில், பள்ளி மாணவி சக மாணவர்களால் கழுத்தறுக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக ஒரு மாணவன் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளான்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு பிறகு, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், போதை பொருள் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், போதை பொருட்களே அரசியல் கட்சியினரே விற்பனை செய்துவருவதால், அவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க திராணியற்று உள்ளது. இதனால், பள்ளி குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் போதைக்கு அடிமையாகிவருகின்றனர். இதனால், பாலியல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,. கரூர் அருகே செயல்பட்டு வரும் பளிளி ஒன்றில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சக மாணவன் ஒருவன், மாணவியை காதலிப்பதாக கூறி , அவருக்கு பரிசு தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சக மாணவர்களை வரவழைத்து சகமாணவர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியை மிரட்டி, இதை யாரிடமும் கூறினார், கொன்றுவிடுவோம் என மிரட்டியதுடன், அவரது கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து மிரட்டி உள்ளனர்.
கழுத்தறுபட்ட நிலையில் வீடு சென்ற பள்ளி மாணவி, இதுகுறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததுடன், உடனே திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்தறையினர், கழுத்தறுபட்ட பள்ளி மாணவியிடம் விசாரணைநடத்தினார்.
மாணவி தரப்பி அளித்த புகாரின் பேரில் 12-ம் வகுப்பு மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், மற்றவர்கள் குறித்து விசாரித்த நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அதாவது, 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது முதல், தினசரி பல்வேறு பாலியல் சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை, 14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 24.01.25 அன்று திண்டுக்கல் நத்தம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.01.25 அன்று தென்காசி வீராணத்தில் காவலர்களால் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல், 25.01.25 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மகிழுந்தில் பயணித்த பெண்களை வீடுவரை விரட்டி சென்ற கொடுமை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை, 05.02.25 கிருஷ்ணகிரி பர்கூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 05.02.25 அன்று கள்ளக்குறிச்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் முகத்தில் சாணியை வீசி கீழே தள்ளி கொடுந்தாக்குதல், 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 05.02.25 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி 4-ம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை, 06.02.25 அன்று சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.11.24 அன்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, 21.11.24 அன்று நாகர்கோவிலில் பள்ளி மாணவிக்கு அரசு பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை, 07.12.24 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, 21.12.24 அன்று சங்கரன்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 26.12.24 அன்று ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இதுபோன்ற ஒழுக்கக்கேடான சம்வங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட்டுவிட்டு, மக்களுக்கு தேவையில்லாத மற்றும் தேவையற்ற இந்தி திணிப்பு , மத்தியஅரசுடன் மோதல் போக்கு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, மக்களின் மனநிலையை திசைமாற்றி வருகின்றனர்.
கோவையில் 17 வயது டீனேஜ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்! கிருஷ்ணகிரியில் பரபரப்பு…
8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள்! இது கிருஷ்ணகிரி சம்பவம்…
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்! கிருஷ்ணகிரியில் பரபரப்பு…
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்… ! திமுக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி
பள்ளிகளில்அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை: புகார் எண்-ஐ அறிவித்தது தமிழ்நாடு அரசு….