சென்னை: சென்னையில் பெரம்பூர் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் குற்றவாளிகளால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக வசை பாடியுள்ளார்.
சென்னை திருவிக நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமிகள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை திருவிக நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும். “SIR” போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல “SIR”கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இது கண்டனத்திற்கு உரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் கிண்டியில் உள்ள பிரசித்தி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ம் தேதி என்ஜினீயரிங் மாணவி திமுக அனுதாபி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காவல்துறை பதிவு செய்த, முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. அதுபோல, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார் என்று ஒருவரிடம் பேசியிருப்பதாகவும் , அந்த சார் யார்? என்பது குறித்து உயர் அதிகாரி தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பப்ட்டவ ந்தது.
இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருவதுடன்,. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து சட்டப்பேரவையிலும் அதிமுக உறுப்பினர்கள் யார் அநத் சார் என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, சமுக வலைதளங்களில் யார் அந்த சார் (SIR)? டிரெண்டிங்கானது.
ஆனால், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளயின ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அவர் திமுக உறுப்பினரே இல்லை என மறுத்து வருகிறது. மேலும் யார் அந்த சார் என்பதை தெரியாது, தெரிந்தவர்கள் அதற்கான ஆதாரங்களை கொடுக்கலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு அரசு இதுபோன்ற சார்களை கைது செய்யாததே இன்று பள்ளி மாணவிகள் பாலியல் பலாக்காரத்துக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.