திருச்சி: திருச்சி அருகே உள்ள ரீரங்கத்தில் பிரபல ரவுடி ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெடிடடி கொலை செய்யப்பட்டுள்ளார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலையில் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, எதிர் ரவுடி கும்பலால் வழிமறித்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது  உடலை கைப்பற்றி கொலைகாண காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பு.  இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் உள்ள பிரபல ரவுடி திலீப் கோஷ்டியை  சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் அந்த பகுதியில் வசித்து வருவதுடன், அங்குள்ள ஜிம்மில் காலை உடற்பயிற்சி செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதை நோட்டுமிட்டு வந்த எதிர்க்கட்சி கோஷ்டியினர், இனறு காலை ஸ்ரீரங்கம் மேலூர் சாலைப் பகுதியில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் வழியில் மர்ம கும்பல் அன்புவை துரத்தி உள்ளது. இதைக்கண்ட அன்பு,  அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் தப்பி ஓடினார்.  ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள தெப்பக்குளம் பகுதியில், அவரை  விரட்டி வந்த  கும்பல் தெப்பக் குளம் பஸ் பார்க்கிங் பகுதியில் அவரை பிடித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதைக்கண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பஸ் பார்க்கிங் பகுதியில் நடைபெற்ற படுகொலையை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த காவல்ததுறையினர், அன்பு  உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த அன்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீ ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அன்பு கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் ,  உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலையில் இருந்து கலைந்து சென்று மருத்துவமனை முன்பு கூடி உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.  தொடர்ந்து, அந்த பகுதியில் அன்பு ஆதரவாளர்கள் கூடி வருவதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.