சென்னை: மத்தியஅரசின் நிதியில் பயிற்றுவிக்கப்படும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதன்படி,  மத்தியஅரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி, டெய்லரிங் டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆட்சியில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி,  மத்திய அரசின் நிதியில் தையல், அழகுக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் கற்றுத்தரப்பட்டு வந்தது. இவை வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும். வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்களே இருக்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.