லண்டன்: இங்கிலாந்தில் 98வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதை அவர்  மகிழ்ச்சியுடன், ஆரவாரமாக சியர்ஸ் காட்டி,. கொண்டாடிய காட்சி தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் டிசம்பர் 8ந்தேதி முதல் பொதுமக்களுக்கு பிஃபைசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்களப்பணி யாளர்கள், முதியவர்கள் என  மொத்தம் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் தடுப்பூசி  90வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு போடப்பட்டது. அதையடுத்து 2வது தடுப்பூசி வில்லியம் சேக்ஸ்பியர் (வயது 81 ) என்பவருக்கு போடப்பட்டது. அதுபோல,   இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களில் முதல் கொரோனா தடுப்பூசியை பிரிட்டனில் வசித்து வரும்   ஹரி சுக்லா (வயது 87) என்பவருக்கு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,  98 வயதான ஜாக் என்பவருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதை அவர் மகிழ்ச்சியுடன், இரு கட்டைவிரல்களை காட்டி, உற்சாகமாக சீயர்ஸ் சொல்லிய காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.