Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சேலம் மாவட்ட செய்திகள் தமிழ் நாடு

89.50 அடியாக உயர்வு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு…

Sep 3, 2020
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 6,522 கனஅடியில் இருந்து 17,937 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவும் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
கடந்த மாதம் தொடக்கத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் அளவை அதிகரித்த நிலையில், இடையில், குறைத்து வந்தது. இதற்கிடையில்,  மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம்  டெல்டா பாசனத்துக்காகதண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணையில், 100அடி வரை எட்டிய தண்ணீர் படிப்படியாக குறையத் தொடங்கியது.  வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், தற்போது, வினாடிக்கு  9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.  கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதேவேளையில்,  மேட்டூர் அணைக்கு கடந்த இரு வாரமாக குறைந்த அளவிலேயே நீர் வந்து கொண்டிருந்தது.  சுமார் 6500 கன அளவிலான நீர் வந்துகொண்டிருந்தது. ஆனால், நேற்று மாலை முதல் மீண்டும்  நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு  17,937 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
தற்போதைய நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.50 அடியாகவும், நீர்இருப்பு 52.08 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

Post navigation

காங்கேயத்தில் கனமழை: மின்னல் தாக்கி 15 ஆடுகள் பலியான பரிதாபம்
பொருளாளர் பதவிக்கு டிஆர்.பாலு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி…

Related Post

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer