திருப்பூர்: காங்கேயம் அருகே, கனமழை பெய்தபோது, அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் பலியான பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில், வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில்,  காங்கேயம்  அருகே உள்ளது  உத்தாம்பாளையம் பகுதியிலும் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது.

அப்போது, அந்த  கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி  என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் ஆடுகள்,  அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.  நேற்று மாலை 4 மணி அளவில்,  இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது.

அப்போது, திடீரென ஏற்பட்ட மின்னலில், தென்னை மரம் அடியில் நின்றுகொண்டிருந்த பல ஆடு கள் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன.

இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவருடன் கால்நடை மருத்துவ குழுவினரும் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். இந்த சம்பவத்தில் 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த  ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சம் எனவும், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயி சுப்பிரமணி கோரிக்கை வைத்துள்ளார்.