சென்னை: திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில்,  வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது.

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அந்த இடம் காலியாக இருந்து வருகிறது. அதபோல, திமுக பொருளாளர் பதவியும் காலியாக உள்ளது. இந்த இரு பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு வரும் 9ந்தேதி திமுக பொதுவுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்றுமுதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.  திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் பெயரில், திமுக எம்.எல்.ஏ அன்பரசன், திமுக தலைமைய கமான அண்ணா அறிவாலயத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்தார். நாளை மாலை வரை வேட்புமனுத் தாக்கல் மற்றும் திரும்ப பெறவும் அவகாசம் உள்ளது.

தொடர்ந்து  5ந்தேதி காலை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு இறுதிப்பட்டியல் வெளியிடப் படும் என்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்..

பின்ன்ர, திமுக பொதுக்குழுக் கூட்டம், 09-09-2020 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. அன்றைய தினம்,  கட்சியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் யார் என்பது தெரிய வரும்.