போபால்

த்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் 8 சிறுத்தைகள் சேர்க்கப்பட உள்ளன.

கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.  எனவே 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேச மாநில குணோ தேசிய  பூங்காவில் திறந்து விடப்பட்டன.  பிறகு சென்ற வாரம் திறந்து விடப்பட்ட சிறுத்தைகள் உட்பட தற்போது 11 சிறுத்தைகள் இங்கு உள்ளன.

இந்த பூங்காவில் மொத்தம் 20 சிறுத்தைகள் வரை வாழமுடியும், எனவே விரைவில் மேலும் சிறுத்தைகளைத் திறந்து விட 11 உறுப்பினர்கள் கொண்ட குழு திட்டமிட்டது.   இதையொட்டி மேலும்  8 சிறுத்தைகளை அடுத்த சில வாரங்களில் திறந்து விடப்படும் எனக் குழுவின் தலைவர் ராஜேஷ் கோபால் நேற்று அறிவித்துள்ளார்.

அவர் மேலும், “குணோ தேசிய பூங்காவில்  சிறுத்தைகள் வாழப் போதுமான இடம் 1500 சதுர கிமீ காடுகளில் அமைந்துள்ளது.  அவைகள் இந்த பகுதிகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய முடியும்.   ஒருவேளை இந்த சிறுத்தைகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களுக்குள் நுழைந்தாலும் அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுடன் இவற்றைக் கண்காணிக்க கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.