சென்னை

சென்னை துறைமுகத்தில் நெரிசலைக் குறைக்க 8 கிமீ தூரத்த்க்கு பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளது

 

 

மகாராஷ்டிரா தலைநக்ர் மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பைப் போலவே சென்னைக்கும் விரைவில் சொந்த கடல் இணைப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.   அதாவது சென்னை துறைமுகத்தில் நெரிசலை குறைக்கும் வகையில், 8 கி.மீ., தூரத்திற்கு பாலம் கட்டுவதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மத்திய கிடங்கு கார்ப்பரேஷன் லிமிடெட், மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ், விச்சூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அசோக் லேலண்ட், தோஷிபா, தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட், SAIL ஸ்டாக்யார்டு போன்ற முக்கிய தொழில் நிறுவனங்கள் அருகாமையில் அமைந்துள்ளதால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகி உள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் நான்கு முக்கிய சாலைகளை நான்கு வழிச் சாலையாக 7.60 கி.மீ. நீளம் மேம்படுத்தப்பட்டது. ஆயினும் இந்த இருபதாண்டுகளில், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறிப்பாக சென்னை துறைமுகம் செல்லும் கன்டெய்னர் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் பொதுப் போக்குவரத்தில் சமாளிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.

எனவே போக்குவரத்து சிக்கலை தவிர்க்க இந்த சாலை மேம்பாலமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த பாலம் 7.60 கிமீ தூரத்தில் அமைய உள்ளது.