லக்னோ:

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் வீசியது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் இறந்தனர். பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டது. அங்கும் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பிஜினோர், பெய்ரெலி, ஷாரன்பூர் மாவட்டங்களும் பாதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். புழுதி புயலில் சிக்கி இது வரை 64 பேர் உயிரிழந்திருப்பதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.