திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை மேம்படுத்த சிங்கப்பூரை சேர்ந்த் சர்வதேச குடிமக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் திட்ட அறிக்கையை அந்த அமைப்பு விரைவில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் புபேந்திரகுமார் மேலும் மோடி கூறுகையில், ‘‘ இந்த திட்டத்தில் கோவிலின் பாரம்பரிய சொத்துக்கள், மதிப்பு மிக்க ஆபரணங்களையும் பாதுகாக்கும் அம்சங்களும் ஏற்படுத்தப்படும். கோவிலுக்கு அருகில் அத்வைத வேதாந்த பயிற்சி நிலையம் ஏற்படுத்தப்படும். இங்கு வேதாந்த தத்துவங்கள் மற்றும் இந்து ஆன்மீகம் குறித்து பயிலும் வசதி ஏற்படுத்தப்படும். இது குறித்து திருவிந்தாகூர் சம்ஸ்தான குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

கோவில் மேம்பாடு குறித்து 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. திருவிதாங்கூர் மன்னர் குடும்ப மூத்த உறுப்பினர் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய், உலக இந்து கூட்டமைப்பு பிரதிநிதிகள் ப்ரீத்தி மல்கோத்ரா, அஜய் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.