ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் 2வது பகுதி நேற்று தொடங்கியது. இந் நிலையில், மக்களவையில் இன்று ஜம்மு – காஷ்மீர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஜம்மு – காஷ்மீர் பகுதியில் 2018 முதல் 2020 வரை 635 தீவரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர். 2018ம் ஆண்டில் 257 பேர், 2019ல் 157 பேர் மற்றும் 2020ல் 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 2021 பிப்ரவரி 15 வரை 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.