கவுகாத்தி: அசாமில் பாஜக முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல் செய்தார்.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதி 47 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ம் தேதி 39 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந் நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவர் மஜுலி தொகுதியில் தமது வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து சோனோவால் தீவிர பிரச்சாரத்தில் இறங்க உள்ளார்.