சென்னையைச் சேர்ந்த GRT Jewellers நிறுவனம், மும்பையைச் சேர்ந்த பிரபல நகை நிறுவனமான Tribhovandas Bhimji Zaveri (TBZ)-யின் 74.1% பங்குகளை ரூ.1,033.7 கோடி வரை செலுத்தி வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் இந்தியா முழுவதும் GRT-யின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. TBZ-க்கு நாடு முழுவதும் 37 கடைகள் உள்ளன. GRT-க்கு இந்தியாவில் 68 கடைகளும், சிங்கப்பூரில் ஒரு கடையும் உள்ளன.

TBZ-யின் மீதமுள்ள சுமார் 26% பங்குகளையும் வாங்க, SEBI விதிகளின்படி GRT திறந்தநிலை பங்கு கொள்முதல் அறிவிப்பை வெளியிட உள்ளது.

162 ஆண்டுகள் பழமையான TBZ நிறுவனத்தை கையகப்படுத்துவது, நாடு முழுவதும் தனது தடத்தை விரிவுபடுத்தும் GRT-யின் நீண்ட நாள் இலக்கை நிறைவேற்றும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினர்.