ஷில்லாங்,

வேலை செய்யாத ஊழியர்களுக்கு ரூ.5 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக மேகாலய அரசு மீது மத்திய அணிக்கை குழு குற்றம்சாட்டி உள்ளது.

நாடு முழுவதும் அதிக அளவில் லாட்டரி சீட்டுகளை வெளியிட்டு வந்த மாநிலம் மேகாலயா. உச்சநீதி மன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு காணமாக 2011ம் ஆண்டு லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், மேகாலயா அரசு நடத்தி வந்த அனைத்து லாட்டரி சேவைகளும் 2011-ம் ஆண்டு  நிறுத்திய நிலையில், 27 மாநில லாட்டரிகள் இயக்குனரக ஊழியர்களுக்கு வருகை பதிவில் கையெழுத்துப் போட்டால் போதும் என்று சம்பளம் அளித்து வந்துள்ளது.

2016-ம் ஆண்டு வரை அதாவது எட்டு வருடமாக மேகாலயா அரசு 27 ஊழியர்களுக்கு 5.69 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது சிஏஜி அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இவர்களுக்கு மாற்றுப்பணிகள் எதுவும் ஒதுக்காத நிலையில் வேலையில்லாமல் சம்மளம் பெற்றுள்ளனர்  என்று அண்மையில் வெளிவந்த தணிக்கையாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.