லக்னோ,

த்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அமோக வெற்றிபெற்ற நிலையில் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

உ.பி.முதல்வராக யோகி பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது ஒருசில முடிவுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் பல முடிவுகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் திகைத்துபோய் உள்ளனர்.

மாநில பா.ஜ.க தலைவர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி, மாநில அரசு ஊழியர்கள் 18 முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்யத் தயாராக வேண்டும்,

அரசு திட்டங்கள் மாநில அரசு, அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும், அமல்படுத்துவதிலும் எவ்விதமான தொய்வும் இருக்கக் கூடாது. இதனால் 18-20 மணிநேரம் வேலை செய்யும் அதிகாரிகள் மட்டும் தங்களது பணியைத் தொடரலாம். மற்றவர்கள் எவ்விதமான தாமதம், தடையுமின்றி வெளியேறலாம்.

நான் கடுமையாக உழைப்பவன், அரசு அதிகாரிகள் அரசின் தேவையை முழுமையாகப் பூர்த்திச் செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் வேலை செய்யாதவர்கள், அரசின் தேவையைப் பூர்த்திச் செய்யாவார்களுக்கு அரசு பணியில் இடம் இல்லை என்று கூறினார்.

உ.பி. முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மாநில அரசு மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் மற்றும் பல சலுகைகளை அனுபவிக்கும் அரசு அதிகாரிகள், மக்களின் நலனுக்காக 18-20 மணிநேரம் பணியாற்றுவது தவறு இல்லை என உபி மக்கள் கூறுகின்றனர்