வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே இரு பேருந்துகள் மோதியதில் 4 பேர் உயிரிழந்து 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு சொகுசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  இத விபத்து  வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் அதிகாலையில் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது பயங்கரமாக மோதியதாகத் தெரிகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  இறந்தவர்களில் 3 பேர் ஆண்கள் ஒருவர் பெண்., 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாணியம்பாடி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.