சென்னை

ரும் 15ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிவரை 33 ஆயிரத்து 593 சிறப்பு பேருந்துகள் தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படுகின்றன

வருடா வருடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.   அதே போல் இந்த ஆண்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பற்றி ஒரு செய்திக் குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் காணப்படுவதாவது :

தினசரி சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2275 பேருந்துகள் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை.  இத்துடன்   சென்னையில் இருந்து மாவட்ட தலைநகர்களுக்கும் மற்றும் முக்கிய ஊர்களுக்கும் 15ஆம் தேதி 788 சிறப்பு பேருந்துகளும், 16ஆம் தேதி 1844 சிறப்பு பேருந்துகளும், 17ஆம் தேதி 2188 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

அதே போல மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 15ஆம் தேதி 1291 சிறப்பு பேருந்துகளும், 16ஆம் தேதி 3865 சிறப்பு பேருந்துகளும், 17ஆம் தேதி 5955 சிறப்பு பேருந்துகளும் அது தவிர வழக்கமான பேருந்துகளும் இயக்கப்படும்.

தீபாவளி முடிந்த பின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 19ஆம் தேதி 1388 சிறப்பு பேருந்துகளும், 20ஆம் தேதி 466 சிறப்பு பேருந்துகளும், 21ஆம் தேதி 492 சிறப்பு பஸ்களும், 22ஆம் தேதி 1498 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்

பிற ஊர்களில் இருந்து மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு தீபாவளி முடிந்து திரும்ப செல்ல, 19ஆம் தேதி 1933 சிறப்பு பேருந்துகளும், 20ஆம் தேதி 1300 சிறப்பு பஸ்களும், 21ஆம் தேதி 1400 சிறப்பு பேருந்துகளும் 22ஆம் தேதி 2410 சிறப்ப்ய் பேருந்துகளும் இயக்கப்படும்.

இந்த ஆண்டும் 300 கிமீ தூரத்துக்கு மேல் சிறப்பு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஆன்லைனில் www.tnstc.in என்ற வெப் தளத்தின் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.   கணினி முன் பதிவு செய்வோருக்காக சென்னையில் உள்ள கோயம்பேடு, தாம்பர சானடோரியம் பூந்தமல்லி ஆகிய இடங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

பேருந்துகள் இயக்கப்படும் நிலையங்கள் பற்றிய விவரம் :

ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் அண்ணா நகர் மேற்கு டிப்போவில் இருந்து கிளம்பும்

ஈ சி ஆர் வழியாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்ட நீதிமன்ற பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும்

திண்டிவனம் வழியாக மற்றும் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியத்தில் இருந்து கிளம்பும்

பூந்தமல்லியில் இருந்து ஆற்காடும் வேலூர், தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் , ஓசூர் செல்லும் பேருந்துகள் கிளம்பும்.

இந்த பேருந்து நிலைய மாறுதல் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை அனைத்து பேருந்துகளுக்கும் பொருந்தும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இணைப்பு பேருந்துகள் ஓட்டப்படும்.