செம்மரம் கடத்த முயன்றதாக 24 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

Must read

கடப்பா,

செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக 24 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள லங்கமல நல்லமல வனபகுதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற 24 தமிழர்களை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது தப்பியோடிய 20க்கும் மேற்பட்டோரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 31 செம்மர கட்டைகளை யும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா சபாரி கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

More articles

Latest article