டில்லி,

ரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதான டி.டி.வி.தினகரன் விசாரணைககாக இன்று சென்னை அழைத்து வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க இடைத்தரகர் சுகேஷ் சந்த்திரசேகர் மூலம் முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 4 நாட்கள் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் டிடிவி தினகரன் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை ஜாமினில் விட மறுத்த நீதிபதி  டில்லி போலீசாரின் கோரிக்கையை ஏற்று 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், விசாரணைக்காக சென்னை, பெங்களூர், கொச்சி அழைத்து செல்லப்பட இருக்கிறார்.

விசாரணையின் முதல் கட்டமாக இன்று மதியம் தினகரனை சென்னை அழைத்து வருகின்றனர் டில்லி போலீசார்.  அப்போது பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த டில்லி  போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.