லக்னோ, 

ரே நாளில் 84 ஐ.ஏ.எஸ், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளா முதல் யோகி ஆதித்யநாத்.

உ.பி.யில் பாரதியஜனதா முதல்வரான யோகி ஆதித்யநாத்  பதவி ஏற்ற நாள் முதல்  பல்வேறு அதிரடி அறிவிப்புகைளை வெளியிட்டு வருகிறார்.

நேற்று ஒரே நாளில்  உத்தரப்பிரதேசத்தில் 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை இடம்மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இந்த இடமாற்ற நடவடிக்கை காரணமாக  அரசு நிர்வாக ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்பபடுத்தும் என கூறப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.