தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

சென்னை,

மிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டுள்ளனர். இது அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று 14 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 24 ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநராக சீதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலை வாய்ப்பு, பயிற்சி நிர்வாக இயக்குநராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்.

பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குனராக வெங்கட பிரியாயும்,  வணிகவரித்துறை இணை ஆணையராக சிவராசு நியமனம்.

சுகாதார முறை திட்ட இயக்குநராக உமா நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவராக அம்ரித் நியமனம்

அருங்காட்சியக இயக்குனராக கவிதா ராமு மற்றும்  ஆவண காப்பக இயக்குநராக அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேகோசர்வ் மேலாண் இயக்குனராக கஜலட்சுமி, தாட்கோ மேலாண் இயக்குனராக என்.சுப்பையன் ஆகியோர்  நியமனம்.

முதலமைச்சர் அலுவலக துணை செயலாளராக இருந்த பொன்ராஜ் ஆலிவர், மறுவாழ்வு துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக துறை கூடுதல் ஆணையர் ராஜாராமன், மருத்துவ சேவை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.
English Summary
24 IAS officers Transferred in Tamilnadu